/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கல்

ADDED : நவ 25, 2024 01:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், சிந்து சம-வெளி நுாற்றாண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து, 75 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 3 பிரிவுகளில் நடந்த இப்-போட்டியில், முதல், 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்-செல்வம், நடுவராக செயல்பட்டார். இதில், உயர்நிலை பள்ளிக-ளுக்கான போட்டியில், முதல் பரிசு திவ்யா, 2ம் பரிசு சக்திவேல், 3ம் பரிசு வேதாஸ்ரீ ஆகியோரும், தொடக்க நிலை முதல் பிரிவு போட்டியில், முதல் பரிசு பர்ஹான், 2ம் பரிசு யாக்ஷிதா, 3ம் பரிசு ஹேமச்சந்திரன் ஆகியோரும், தொடக்க நிலை, 2வது பிரிவு போட்டியில், முதல் பரிசு கதிர் செல்வன், 2ம் பரிசு பரமேஷ், 3ம் பரிசு பிரீத்திகா ஆகியோர் வென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் செய்திருந்தார்.