டாஸ்மாக்கில் தள்ளுமுள்ளுவை தவிர்க்க ஊழியர்கள் செலவில் தடுப்பு அமைப்பு
டாஸ்மாக்கில் தள்ளுமுள்ளுவை தவிர்க்க ஊழியர்கள் செலவில் தடுப்பு அமைப்பு
ADDED : ஜூன் 05, 2026 05:00 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அருகே, டாஸ்மாக் கடையில் அதிகரித்த தள்ளுமுள்ளுவை தவிர்க்க, ஊழி-யர்கள் தங்கள் சொந்த செலவில், கடைக்கு முன் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
தமிழகத்தில், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறு-வனங்கள், பஸ் ஸ்டாண்ட் அருகே, 500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள, 717 மது கடைகளை, இரு வாரங்களுக்குள் மூட, முதல்வர் விஜய், மே, 12ம் தேதி உத்தரவிட்டார். அதற்கேற்ப கடைகளை மூடும் பணிகளை, டாஸ்மாக் மாவட்ட மேலா-ளர்கள் மேற்கொண்டனர். மூடாமலுள்ள கடை-களை, நாளைக்குள் மூடி, அதை மக்களுக்கு தெரி-விக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு அரசு உத்-தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம், 117 டாஸ்மாக் கடைகள் இயங்கிய நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, 3 டாஸ்மாக் கடைகள், வேலம்பட்டி கூட்ரோடு, காவேரிப்பட்டணம், அரசம்பட்டி, பெத்ததாளப்பள்-ளியில் கோவில் அருகே என, மொத்தம், 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனால் மதுப்பிரியர்கள், ஆர்.பூசாரிப்பட்டியி-லுள்ள டாஸ்மாக் கடைக்கு படையெடுத்ததால், அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்-தனர். கடந்த, 2 நாட்களாக கூட்டத்தை கட்டுப்ப-டுத்த ஊழியர்கள் திணறினர். இதனால் கடைக்கு முன் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தள்ளுமுள்-ளுவை தவிர்க்கவும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில், சவுக்கு மர தடுப்பு அமைத்து, வரிசையில் மதுவை வாங்கி செல்ல ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'அதிக கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பணம் யார் கொடுக்கிறார்கள், மது யாருக்கு கொடுக்-கிறோம் என்பது கூட தெரியவில்லை. எனவே, நாங்களே தடுப்பு அமைத்துள்ளோம்' என்றனர்.
