/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீசாரின் போன்களை 'சுட்டு' தப்பி ஓடிய கைதி
/
போலீசாரின் போன்களை 'சுட்டு' தப்பி ஓடிய கைதி
ADDED : மார் 31, 2025 07:35 AM
ஓசூர்; கஞ்சா கும்பலை பிடிக்க தன்னுடன் ஹோட்டலில் தங்கியிருந்த கேரள எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரரின் மொபைல் போன்களை திருடி, தப்பிய கஸ்டடி கைதியை, ஓசூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே மணக்கொடி தேசத்தை சேர்ந்தவர் ஆல்வின், 21. கஞ்சா வைத்திருந்த இவரை, நெடுப்புழா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, கர்நாடகாவில் இருந்து கஞ்சா கிடைத்ததாக கூறினார். இதனால் கஞ்சா கும்பலை பிடிக்க, எஸ்.ஐ., சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார், ஆல்வினை அழைத்து கொண்டு, பெங்களூரு புறப்பட்டனர்.
கடந்த, 28ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்தனர். ஓசூரில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். தன்னுடன் வந்த எஸ்.ஐ., மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரின் மொபைல்போனை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் அவர் தப்பினார். எஸ்.ஐ., சந்தோஷ்குமார் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், ஆல்வினை தேடி வருகின்றனர்.