/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிறுவன பணத்தை 'லபக்'க்கிய தனியார் நிறுவன அதிகாரி கைது
/
நிறுவன பணத்தை 'லபக்'க்கிய தனியார் நிறுவன அதிகாரி கைது
நிறுவன பணத்தை 'லபக்'க்கிய தனியார் நிறுவன அதிகாரி கைது
நிறுவன பணத்தை 'லபக்'க்கிய தனியார் நிறுவன அதிகாரி கைது
ADDED : ஆக 16, 2025 02:14 AM
ஓசூர்:பணத்தை நிறுவனத்திற்கு வழங்காமல் மோசடி செய்த தனியார் நிறுவன விற்பனை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்னாஸ், 26. சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாலர் தெருவில் தங்கி, 'சேலம் ஸ்கீம் பிரைம்' என்ற கம்பெனியில் மேலாளராக உள்ளார். அதே கம்பெனியில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மன்னார்பாளையம் புதிய காலனியை சேர்ந்த பிரபு, 41, விற்பனை அதிகாரியாக உள்ளார். ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் தங்கியிருந்தார். கடந்த ஜூன், 25ம் தேதி, ஓசூர் சிவசக்தி நகரில் உள்ள பிரணவ் சூப்பர் மார்க்கெட்டில், ஒரு லட்சத்து, 39,367 ரூபாயை பெற்றார்.
ஆனால், ஆர்டர் எடுத்த பொருட்கள் டெலிவரி செய்யப்படவில்லை. இதனால், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், அந்நிறுவனத்தில் மேலாளர் முகமது அப்னாஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் விசாரித்த போது, சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய பணத்தை, நிறுவனத்தில் பிரபு ஒப்படைக்கவில்லை என்பது தெரிந்தது. முகமது அப்னாஸ் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, பிரபுவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

