ADDED : பிப் 05, 2026 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயக்கோட்டை: ராயக்கோட்டை அடுத்த உள்ளுகுறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் அசோக், 25. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும், நல்ராலப்பள்ளியை சேர்ந்த திலீப், 24, என்பவரும், நேற்று முன்தினம் மாலை, பஜாஜ் பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.
திலீப் பைக்கை ஓட்டினார். ராயக்கோட்டை - கெலமங்கலம் சாலையில் உள்ள தொட்டதிம்மனஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே மாலை, 5:40 மணிக்கு சென்றபோது, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனத்தின் பின்னால் பைக் மோதியது.இதில், அசோக் சம்பவ இடத்திலேயே பலியானார். திலீப் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விபத்திற்கு காரணமான டாடா ஏஸ் வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.

