ADDED : ஜூன் 25, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; ஓசூர் அண்ணாமலை நகரில் வசிப்பவர் ஹரி, 27. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 2019ம் ஆண்டு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்-பிலான புல்லட்டை வாங்கி பயன்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் தேதி இரவு, தன் வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.
நேற்று காலை பார்த்த போது காணவில்லை. அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்த்த போது, அதிகாலை, 4:53 மணிக்கு, மர்ம நபர் ஒருவர், புல்லட்டின் லாக்கை உடைத்து திருடி செல்வது தெரிந்தது. இது தொடர்பாக, ஓசூர் சிப்காட் போலீசில் ஹரி புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
