/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள்
/
11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள்
11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள்
11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தனியார் பள்ளிகள் சங்கம் வேண்டுகோள்
ADDED : பிப் 17, 2025 02:55 AM
கிருஷ்ணகிரி: பதினோராம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க, மாநில பொதுக்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கி-ணைப்பாளருமான அன்பரசன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்-துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் தற்போது, 10, 11 மற்றும், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து, 3 ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வதால், மாணவ, மாணவியர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால், 11ம் வகுப்பு மாண-வர்கள் பள்ளியில் இருந்து, இடை நிறுத்தல் அதிகரித்துள்ளது. நீட், ஜே.இ.இ., மற்றும் பிற அகில இந்திய தேர்வுகளுக்கு தயா-ராவதில் நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால், 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு உயர்கல்விக்கான அடிப்படை சான்றாகவும் அமையாது. மேலும், பல மாநிலங்களில், 11ம் வகுப்பு பொதுத்-தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு மட்டும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே மாணவ, மாணவியரின் மனநலன் கருதி, 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ய ஆலோசிக்குமாறு, தமிழக பள்ளிக் கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

