/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற 687 பேருக்கு பரிசு வழங்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற 687 பேருக்கு பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற 687 பேருக்கு பரிசு வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற 687 பேருக்கு பரிசு வழங்கல்
ADDED : அக் 01, 2024 01:22 AM
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
வெற்றி பெற்ற 687 பேருக்கு பரிசு வழங்கல்
கிருஷ்ணகிரி, அக். 1-
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த, 10 முதல், 25 வரை கேரம், சிலம்பம், நீச்சல், ஹேண்ட்பால், கூடைப்பந்து, வாலிபால், செஸ், கால்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, மேசைப்பந்து, கோ கோ, கபடி, தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. இதில், 17,546 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற, 687 வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா, 3,000 ரூபாய், 2ம் பரிசாக தலா, 2,000 ரூபாய், 3ம் பரிசாக தலா, 1,000 ரூபாய் என, 44.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை கலெக்டர் சரயு மற்றும் எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் வழங்கி பாராட்டினார். முதலிடம் பெற்ற, 687 வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடக்கும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், கட்டிகானப்பள்ளி பஞ்., தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.