/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : டிச 04, 2024 01:40 AM
பாலக்கோடு, டிச. 4-
தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த, 2 நாட்களாக நடந்தன. தலைமை ஆசிரியர் லட்சுமணன் துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், தர்மபுரி மாவட்டத்தில், 7 சரகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற பாலக்கோடு, நரிப்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், பேகாரஹள்ளி, வெங்கட்டம்பட்டி ஆகிய, 7 அணிகளை சேர்ந்த ஹாக்கி அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இவற்றில், முதலிடம் பெற்ற பாலக்கோடு ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் வரும், 5ல், திருச்சியில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற பாலக்கோடு அணியினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்
பட்டது.