/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
/
தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
ADDED : டிச 29, 2024 01:17 AM
தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டி
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
ஓசூர், டிச. 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூடசந்திரத்தில் தாலுகா அளவிலான கிரிக்கெட் போட்டிகள் இரு மாதங்கள் நடந்தன. மொத்தம், 20 அணிகள் பங்கேற்று விளையாடின. நேற்று நடந்த இறுதி போட்டியில், ஓசூர் டி.எக்ஸ்., பாய்ஸ் அணியும், வில்லேஜ் பாய்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டி.எக்ஸ்., பாய்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட, 10 ஓவரில், 77 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வில்லேஜ் பாய்ஸ் அணியால், 63 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 14 ரன்கள் வித்தியாசத்தில் டி.எக்ஸ்., பாய்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு முதல் பரிசாக, 77,777 ரூபாய் மற்றும் பரிசுக்கோப்பை, இரண்டாமிடம் பெற்ற வில்லேஜ் பாய்ஸ் அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் 44,444 ரூபாய், மூன்று மற்றும் நான்காமிடம் பெற்ற அணிகளான சுனில் சிசி, பி.டி.பி., அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை, ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் லட்சுமி நவீன்குமார், மாரக்கா சென்னீரன், யஷஸ்வினி மோகன் ஆகியோர் வழங்கினர். சிறப்பாக விளையாடிய, கமலேஷ், தரண், கோபால் ஆகியோருக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன.