ADDED : ஜூன் 17, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
கலெக்டர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை
தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு
மேல்நிலைப்பள்ளியில், 'குழந்தை தொழிலாளர் ஒழிப்பும் சமூக
வளர்ச்சியும்' என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ்
குமார் வழங்கினார்.
தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் ராஜசேகரன்
(அமலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர் மாயவன், முத்திரை ஆய்வாளர்
அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
