/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.50 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.1.50 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : டிச 06, 2025 03:18 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., 1வது வார்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, 3 வது வார்டில், 9.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, 5வது வார்டில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 6, 10வது வார்டில், தலா, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள், 18வது வார்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க, தளி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்-டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் சில பணிகள் உட்பட மொத்தம், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் அப்துல்கலாம், இ.கம்யூ., நிர்வாகக்குழு உறுப்-பினர் லகுமையா, நகர செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்-கேற்றனர்.

