பஞ்ச பூதங்களை பாதுகாத்தால் அது மனிதர்களை வளமாக்கும்'
பஞ்ச பூதங்களை பாதுகாத்தால் அது மனிதர்களை வளமாக்கும்'
ADDED : பிப் 22, 2026 05:54 AM

சூளகிரி: ''பஞ்ச பூதங்களை நாம் பாதுகாத்தால், அது மனிதர்களை வளமாக்கும்,'' என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அருகே, ஹிந்து தர்ம சைதன்யா மகா சபா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியதாவது:
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை பொறுப்புணர்வுடன் நாம் பாதுகாத்து வளர்த்தால், அது நம்மை பாதுகாத்து, மனித சமூகத்தை வளமாக வைக்கும்.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு ஒரு தேர் உள்ளது. தேர்த்திருவிழா நடத்தி, மக்கள் ஒரே இடத்தில் அன்பாக சேர முடியும். அதன் மூலம் பக்தி வளரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்ற அவர், சுவாமிக்கு தீபாராதனை செய்து வழிபட்டார். மேலும், கோவிலுக்காக தயாராகும் புதிய தேரை பார்வையிட்டார்.
