தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'சில்மிஷ' மாணவருக்கு 'காப்பு'

 'சில்மிஷ' மாணவருக்கு 'காப்பு'

 'சில்மிஷ' மாணவருக்கு 'காப்பு'


ADDED : மே 19, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பாரதியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 36. முதுகலை பட்டதாரி. கிருஷ்ணகிரியில், ஒரு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றினார். அதே கல்லுாரியில் தற்போது பிஎச்.டி., படிக்கிறார்.

நேற்று முன்தினம், கல்லுாரியில் நடந்த தேர்வுக்கு, அவர் சூப்பர்வைசராக சென்றபோது, 17 வயது, முதலாமாண்டு கல்லுாரி மாணவி ஒருவரை சோதனை செய்தார்.

அப்போது, அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவி குற்றஞ்சாட்டி, தன் வீட்டிற்கும் தகவல் அளித்தார்.

மாணவியின் உறவினர்கள் ஒன்பது பேர் கல்லுாரிக்கு வந்து, கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். கிருஷ்ணகிரி மகளிர் போலீசார், கார்த்திக்கை போக்சோவில் கைது செய்தனர்.

கார்த்திக்கை தாக்கியதாக, மாணவியின் உறவினர் சரவணன், 43, உட்பட ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us