/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனக்காப்பாளரை மிரட்டியவருக்கு 'காப்பு'
/
வனக்காப்பாளரை மிரட்டியவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 22, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: ஒகேனக்கல் வனப்பகுதியில் பேவனுார் காப்புக்காடு மற்றும் ஆஞ்சநேயர் கோவில் வரையில், வனக்காப்பாளர் ராமஜெயம் ரோந்து சென்றார். கணவாய் பகுதியில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை செய்ய முயன்றபோது, அவர், துப்பாக்கியை காட்டி வனக்காப்பாளரை மிரட்டினார். அவர் புகார் படி, ஒகேனக்கல் போலீசார், மடம் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த செல்வம், 45, என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.