/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 01:28 AM
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்
அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, டிச. 11-
கன மழையால், அடித்து செல்லப்பட்ட தரைமட்ட பாலத்தை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து, எம்பரானஹள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எம்பரானஹள்ளி வழியாக, மிட்டாரெட்டிஹள்ளி, லளிகம், நார்த்தம்பட்டி ஆகிய, 3 பஞ்.,களில் உள்ள கிராமங்கள் செல்ல, ஜலாற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. கடந்த வாரம், பெஞ்சல் புயலால் பெய்த கன மழையில், வத்தல்
மலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தில், எம்பரானஹள்ளி ஜலாற்றின் குறுக்கே இருந்த, தரைமட்ட பாலத்தின் இருபுறமும், பக்கவாட்டு சாலையும் அடித்து செல்லப்பட்டதால், சாலை மற்றும் பாலம் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் வழியாக, வாகன ஒட்டிகள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்ல முடியாமல், பல கி.மீ., சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி, சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில், ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை கண்டித்து, பாலம் சேதமடைந்த பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

