ADDED : செப் 12, 2026 06:00 AM
கிருஷ்ணகிரி; மின்வாரியம் தனியார் மயமாவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, மின்கழக தொ.மு.ச., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறி-யாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், தமி-ழக அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது. மாவட்ட தலைவர் லட்சுமணா தலைமை வகித்தார். செயலாளர் பசவராஜ் பேசினார். பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், மின்
வாரியம் தனியார் மயமாவதை கைவிட வேண்டும். 10 ஆயிரம் பேரை ஒப்பந்த முறையில் பணி அமர்த்துவதை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அடை-யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாள-ராக பதவி மாற்றம் செய்ய வேண்டும். விடுபட்ட கேங்கேன் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
மின்வாரியத்தில் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின்வெட்டுக்கு பணியாளர்கள் மீதும், மீட்டர் குளறுபடிக்கு கணக்கீட்டாளர்கள் மீதும் பழி போடக்கூடாது. தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம்
எழுப்பினர்.
