/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்சி கொடி கம்பங்கள் விற்பனை போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்
/
கட்சி கொடி கம்பங்கள் விற்பனை போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்
கட்சி கொடி கம்பங்கள் விற்பனை போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்
கட்சி கொடி கம்பங்கள் விற்பனை போலீஸ் ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 07, 2025 04:10 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்., பகுதிகளில் இருந்து, அகற்றப்
பட்ட கட்சி கொடி கம்பங்களை, பழைய இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்த, டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.,-தே.மு.தி.க.,- பா.ம.க.,வினர், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த, கட்சி இரும்பு கொடி கம்பங்களை கடந்த லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளின் படி டவுன் பஞ்., நிர்வாகத்தினர் அகற்றி, டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில் வைத்திருந்தனர். நேற்று காலை, அகற்றிய கொடி கம்பங்களை துண்டு, துண்டாக வெட்டி பழைய இரும்பு கடைக்கு டவுன் பஞ்சாயத்து ஊழி-யர்கள் விற்பனை செய்தனர். தகவலறிந்து வந்த அரசியல் கட்சி-யினர், தங்கள் கட்சி கொடி கம்பங்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து டவுன் பஞ்., ஊழியர்கள் உரிய பதில் தராததால், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் முன் அர-சியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி ஒன்-றிய பா.ஜ., தலைவர் அருண், நாமக்கல் மாவட்ட துணைத்த-லைவர் வடிவேல், தே.மு.தி.க., நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ் பரத், ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.