தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்


ADDED : ஜூன் 30, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; ஊணாம்பாளையம் கிராமத்தில் சாலை வசதி கோரி, பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை அருகே, ஊணாம்பாளையம் முதல் பெரியபொம்பட்டி வரையி-லான, 3 கிலோ மீட்டர் சாலை, நீண்ட நாட்களாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதை சரிசெய்யக்கோரி, அப்பகுதி மக்கள் சம்மந்தப்-பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், ஊத்தங்கரை - கல்லாவி சாலையில், 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்-டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாக-னங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்று, பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சம்பவ இடம் வந்த ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,

எஸ்.ஐ., ஜெயகாந்தன் மற்றும் போலீசார், மறி-யலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு-வார்த்தை நடத்தினர். சாலை அமைக்க உரிய நட-வடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி-யளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து

சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us