தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 120 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஓசூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 120 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

ஓசூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 120 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


ADDED : அக் 15, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: ஓசூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 120 பேருக்கு, 10.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பெத்தகொள்ளு கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

ஓசூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அவர்கள் குறைகளை மனுவாக பெற்று நிவர்த்தி செய்யும் வகையிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று, 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 50 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள், 12 பேருக்கு திருமண உதவித்தொகை, வேளாண் கருவிகள், பட்டா, உட்பிரிவு ஆணைகள் உள்பட, 120 பேருக்கு, 10.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாக திட்ட விழிப்புணர்வு முகாமை, கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, விழிப்புணர்வு அட்டைகளை வழங்கினார். ஓசூர் சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, தனித்துணை கலெக்டர் அபிநயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, கிருஷ்ணகிரி மின் பகிர்மான, மேற்பார்வை பொறியாளர் கண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us