/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மயானத்திற்கு வழிப்பாதை பொதுமக்கள் கோரிக்கை
/
மயானத்திற்கு வழிப்பாதை பொதுமக்கள் கோரிக்கை
ADDED : பிப் 11, 2025 07:04 AM
கிருஷ்ணகிரி: காட்டுவென்றவள்ளி பகுதியை சேர்ந்த மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்-துள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரண்டப்-பள்ளி காட்டுவென்றவள்ளி
ஆதிதிராவிடர் காலனியில், 110 குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்களுக்கு தனியாக மயானம்
உள்-ளது. பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் மயானத்திற்கு, வழிப்பாதை பட்டா நிலமாக
உள்ளதால், தற்போது இறந்தவர்-களை எடுத்துச் செல்லும்போது, நில உரிமையாளர்கள் எங்களை
மிரட்டி, இறந்தவர்களை எடுத்து செல்ல அனுமதிப்பதில்லை.இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். நாங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த
மயானத்திற்கான பாதையை, நிரந்தரமாக எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.