/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
/
நிழற்கூட வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜன 06, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே, 19 ஆண்டு
களுக்கு முன் நிழற்கூடம் கட்டப்பட்டது. மருத்துவமனை வரும் நோயாளிகள், பொதுமக்கள் நலன் கருதி கட்டப்பட்ட நிழற்கூ-டத்தில், சில ஆண்டுகளுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்தது.
இதையடுத்து, பொக்லைன் மூலம் நிழற்கூடம் அகற்றப்பட்டது. அதன் பின்னர், நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நிழற்கூடம் இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்-களும், நோயாளிகளும் வெயில், மழையின் போது அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, அரூர் அரசு மருத்துவமனை முன், நிழற்கூடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.