/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி
/
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி
கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : டிச 03, 2024 07:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 3 தினங்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் புகுந்தும், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்
மழைநீர் புகுந்-ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கிருஷ்ணகிரி நக-ராட்சி
மற்றும் முக்கிய பஞ்.,களை தவிர மற்ற பகுதிகளில் மழை-நீரை வடிக்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கவில்லை. இதைய-டுத்து அவரவர் வீடுகளில் தேங்கிய நீரை
பாத்திரங்கள் மூலம் அவர்களே அகற்றினர். அத்தியாவசிய பொருட்கள்
வாங்குவதற்கு கூட, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் கடும்
அவ-திக்குள்ளாகினர்.
ஓசூரில் தொடர் மழைஓசூர் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த, 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்-பட்டு, வீடுகளிலேயே மக்கள்
முடங்கினர். நேற்று காலை நிலவ-ரப்படி, ஓசூர் பகுதியில், 29.50 மி.மீ., அளவிற்கு மழை
பதிவாகி இருந்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.சி.சி., நகர், காளே-குண்டா,
ராம்நகர், ராயக்கோட்டை ஹட்கோ, மூக்கண்டப்பள்ளி, அரசனட்டி, என்.டி.ஆர்., நகர்,
சிவக்குமார் நகர் ஆகிய பகுதி-களில், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், மாநகர நல
அலுவலர் அஜிதா ஆகியோர் நேற்று காலை நேரில் சென்று, பாதிப்புகள் உள்ளதா என பார்வையிட்டனர். மேலும், சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகள்
அகற்றப்பட்டு, நீர் வெளியேற நடவடிக்கை எடுக்-கப்பட்டது.ராம்நகர் பகுதியில் தாழ்வான இடத்தில் உள்ள சாக்கடை கால்-வாயில் மழைநீர்
தேங்கியதால், வீடுகளுக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டது. உடனடியாக
அங்கு மூன்று மோட்டார்கள் மூலம் கழிவு நீர் பம்பிங் செய்து வெளியேற்றப்பட்டது.
காளே-குண்டாவில் கல்வெட்டு பகுதியில் இருந்த அடைப்பு மற்றும் 41வது வார்டில்,
மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாயில் இருந்த அடைப்புகள்
அகற்றப்பட்டன. தேன்கனிக்-கோட்டை சுற்றுப்புற பகுதிகளில், 80 மி.மீ., அளவிற்கு
மழை பெய்தது. சந்தனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டின் பக்-கவாட்டு சுவர்
இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினர்.
அவசர கால தொடர்பு எண்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததை முன்னிட்டு,
பொதுமக்கள் அவசர காலத்தில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள, எண்கள் மாவட்ட
நிர்வாகம் சார்பில் தெரிவிக்-கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக
கட்டுப்-பாட்டு அறையை, 1077 என்ற எண்ணிலும், 04343 234 444 என்ற எண்ணிலும், 24
மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இதே-போல கிருஷ்ணகிரி தாலுகா மக்கள், 04343
236050 என்ற எண்-ணிலும், பர்கூர் தாலுகா மக்கள், 04343 266164 என்ற எண்-ணிலும்,
ஊத்தங்கரை தாலுகா மக்கள், 04341 220028 என்ற எண்-ணிலும் தொடர்பு கொள்ளலாம்.அதேபோல போச்சம்பள்ளி தாலுகா மக்கள், 04341 252370, சூள-கிரி தாலுகா மக்கள், 04344
292098, 252998, ஓசூர் தாலுகா மக்கள், 04344 222493, தேன்கனிக்கோட்டை தாலுகா மக்கள்,
04347 235041, அஞ்செட்டி தாலுகா மக்கள் 04347 236411 என்ற எண்ணிலும் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.