மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி புகார் தெரிவிக்க எண் வெளியீடு
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி புகார் தெரிவிக்க எண் வெளியீடு
ADDED : ஆக 29, 2026 02:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பான புகார்களை பொறுப்பு அலுவலர்கள் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இம்மாதம், 1ம் தேதி துவங்கிய பணி, 30ம் தேதி (நாளை) வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடக்காமல் இருந்தாலோ அல்லது பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலோ, உரிய பொறுப்பு அலுவலர்களின் எண்களை தொடர்பு கொண்டு, கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, தனி தாசில்தார், பேரிடர் மேலாண்மை - 1077, 04343 234444, அஞ்செட்டி தாசில்தார் - 99943 93519, தேன்கனிக்கோட்டை தாசில்தார் - 94450 00542, ஓசூர் தாசில்தார் - 94427 95549, சூளகிரி தாசில்தார் - 94450 00541, கிருஷ்ணகிரி தாசில்தார் - 94450 00538, பர்கூர் தாசில்தார் - 80988 35676, போச்சம்பள்ளி தாசில்தார் - 94450 00540, ஊத்தங்கரை தாசில்தார் - 94450 00539, கெலமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் - 89258 09328, தேன்கனிக்கோட்டை செயல் அலுவலர் - 89258 09329, காவேரிப்பட்டணம் செயல் அலுவலர் - 89258 09326, பர்கூர் செயல் அலுவலர் - 89258 09328, நாகோஜனஹள்ளி செயல் அலுவலர் - 89258 09330, ஊத்தங்கரை செயல் அலுவலர் - 89258 09325, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் - 73973 96251 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் கருத்து, புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
