/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.22 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிக்கு பூஜை
/
ரூ.3.22 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிக்கு பூஜை
ADDED : டிச 27, 2025 05:36 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், தொரப்பள்ளி பஞ்.,ல், கனிமங்கள் மற்றும் குவா-ரிகள் நிதியிலிருந்து, 49.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம், குமுதேப்பள்ளியில், 9.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், மல்லசந்திரம் கிராமத்தில், மாநில நிதி குழு மானிய திட்டத்தில், 49.16 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை.
பாலிகானப்பள்ளி மற்றும் பெலத்துார் பஞ்.,க்களில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தலா, 32.30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஞ்., அலுவலகங்கள், இனப்பசந்-திரம் கிராமத்தில், ஒன்றிய பொது நிதியிலிருந்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை பணிகள் ஆகியவற்றை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திர-மூர்த்தி, முன்னாள் ஒன்றிய குழு துணைத்த-லைவர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்-றனர்.

