/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தசரா பண்டிகையையொட்டி 3 கிராம தெய்வங்களுக்கு பூஜை
/
தசரா பண்டிகையையொட்டி 3 கிராம தெய்வங்களுக்கு பூஜை
ADDED : அக் 14, 2024 06:36 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுக்கு மேலாக, மணியம்பாடி, மேலுார், ஒட்டர்பாளையம் கிராம மக்கள் சார்பில், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும், கிராம தெய்வங்களுக்கு திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு தசரா பண்டிகையையொட்டி, மணியம்பாடி கிராமத்திலுள்ள பசு-வேஸ்வரா சுவாமி, மல்லேஸ்வரா சுவாமி, வீரபத்திர சுவாமி, பட்-டாளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், மேலுார் கிராமத்தில் உள்ள சிக்கம்மா, தொட்டம்மா, சனி மாத்மா, வெங்கடராம சுவாமி மற்றும் ஒட்டர்பாளையம் கிராமத்திலுள்ள திம்மராயசு-வாமி, சென்றாயசுவாமி, வீரபத்திர சுவாமி உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராம தெய்வங்களை, அலங்கரித்த மாடுகளுடன் மேளதாளங்கள் முழங்க, கிராம மக்கள் ஊர்வலமாக மணியம்-பாடி கிராமத்திற்கு தலையில் சுமந்து வந்தனர்.விழா திடலில், அனைத்து கிராம தெய்வங்களுக்கு, சிறப்பு பூஜை செய்து, பாரம்பரிய முறைப்படி வன்னிமரங்களின் கிளை-களை எடுத்து வந்து, அதில் தேங்காயை வைத்து, சூரனை வதம் செய்யும் வகையில், அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான கிராம மக்கள் அம்பு விட்டு, தேங்காய்களை உடைத்தனர். விரத-மிருந்த பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்-கடன் செலுத்தினர். தொடர்ந்து கிராம தெய்வங்களை, பக்தர்கள் தலை மேல் வைத்து பக்தி பரவசத்துடன் ஆடினர். திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.