ADDED : ஏப் 24, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, ஊமையனுாரில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் திருவிழா நடப்பது வழக்கம்.
நேற்று மாரியம்மன் திருவிழா தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடந்தது. மேளதாளம் முழங்க மாரியம்மன் கோவிலுக்கு, கிராம பெண்கள் கூழ் குடங்களை, சாமி ஊர்வலத்துடன் எடுத்துச் சென்றனர்.
கிராமப் பெண்கள் கொண்டுவந்த கூழ் குடங்களை, ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு வழங்கினர். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

