/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்களின் தரம் ஆய்வு
/
தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்களின் தரம் ஆய்வு
ADDED : ஜூலை 06, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்களின் தரம், உறுதித்தன்மையை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கடந்த, 21ல், மேம்பால இணைப்பு பகுதி விலகியது. இதனால், வாகன ஓட்டிகள் உட்பட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து மேம்பாலத்தில் ஆய்வு செய்யப்பட்டு, விலகிய இடத்தில், கட்டைகள் வைத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, சேலம் - கிருஷ்ணகிரி - - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலங்களின் தரம், உறுதித்தன்மையை, தேசிய நெடுஞ்சாலைத்துறை சிறப்பு நிபுணர் குழுவை சேர்ந்த பொறியாளர்கள், ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம், ஆவின் மேம்பாலங்களில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர்கள், பாலத்தின் அமைப்பு சரியாக உள்ளதா, வாகனங்களின் போக்குவரத்தால் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என, ஆய்வு செய்தனர்.