sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

/

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் ரெய்டு; கணக்கில் வராத ரூ.2.89 லட்சம் பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 2.89 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக எல்லையான ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில், சமத்து-வபுரம் அருகே நல்லுார் போக்குவரத்து சோதனைச்சாவடி இயங்-குகிறது. இங்கு, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பாடி கட்டாத வாகனங்களுக்கு வரி விதிப்பது; தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான சரக்கு வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவது; அதிக லோடு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்-பது போன்ற பணிகளை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்-கொள்கின்றனர். அப்போது, அபராதம் மற்றும் பர்மிட் கட்ட-ணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை, 6:00 மணிக்கு சோதனைச்சாவ-டியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராமல், இரண்டு லட்சத்து, 89 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது. பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சாண்டல் உபெர்-சியா மேரியிடம் விசாரித்தனர். அந்த பணத்திற்கு சரியான கணக்கு கூறாததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்-தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சாண்டல் உபெர்சியா மேரி மற்றும் ஊழியர்கள் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் (உள்வழி) கடந்த, 5ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, இரண்டு லட்-சத்து, 25 ஆயிரத்து, 950 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஜூஜூவாடியில் உள்ள மற்றொரு போக்குவரத்து சோதனைச்சாவடி (வெளிவழி) மற்றும் பாகலுார் சாலை நல்லுார் சோதனைச்சாவடியில் சோதனை நடத்தியி-ருந்தால், கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் சிக்கியிருக்கும் என, நமது நாளிதழில் கடந்த, 6ல் செய்தி வெளியானது. அதன்படி, நல்லுார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us