ADDED : மே 31, 2026 04:18 AM

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்க-னிக்கோட்டை, அஞ்செட்டி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பாகலுார், பேரிகை, சூளகிரி, கெல-மங்கலம் பகுதிகளில் உள்ள பசுமை குடில்கள் பலத்த காற்றால் சேதமாகின. கெலமங்கலம் அடுத்த பைரமங்கலம் அருகே எம்.அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த நாகரத்தினம்மா என்பவர், 4 ஏக்கரில் வாழை பயிர் செய்துள்ளார். ஒன்றரை ஏக்கர் வாழை தோட்டங்கள் பலத்த காற்றுக்கு சேதமாகி விட்டன. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, நாகரத்தினம்மா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த பாலாஜி மனைவி எல்லம்மா என்பவரது சிமென்ட் ஷீட் வீட்டின் மீது, மரம் முறிந்து விழுந்ததில், கூரை சேதமானது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், நேற்று மாலை, 2வது நாளாக, சூளகிரி, ஓசூர் சுற்றுப்புற பகுதி-களில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரு நாட்களாக மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, மக்கள் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.
