நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூரில் கடந்த மாதம் ஓரிரு நாட்கள் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் அடித்த நிலையில், நேற்று மதியம், 3:30 மணிக்கு, கருமேகங்கள் திரண்டு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர் காற்று வீசியது.
கனமழையால், ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீரை வெளியேற்றிய பின், சிறிது நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. அதேபோல், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி-யதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்-டனர். சரியான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வடிய நீண்ட நேரமானது.