ADDED : நவ 23, 2025 01:16 AM
தர்மபுரி, தமிழகத்தில், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி நகர பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று காலை முதல், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது, விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ணன நிலை நிலவியது.
* அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை முதல், சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி சென்றனர்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல், விவசாயிகள் அவதிக்கு உள்ளாகினர். மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

