/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 11, 2025 12:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 9 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளமான பல இடங்களில் மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கெலவரப்பள்ளி அணையில், 55 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. சின்னாறு அணை, 42, சூளகிரி, 40, ஓசூர், 31, ஊத்தங்கரை, 29, பாம்பாறு அணை, 22, தேன்கனிக்கோட்டை, 19, ராயக்கோட்டை, 16, கிருஷ்ணகிரி, 10.4, தளி, 7, அஞ்செட்டி, 5.2, போச்சம்பள்ளி, 4.2, பாரூர், 2.2 மி.மீ., மழை என, மொத்தம், 290.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.