ADDED : செப் 06, 2026 04:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. அதனால், விவசாய சாகுபடி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்தங்கரை, பாம்பாறு அணை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, ஊத்தங்கரை, பாம்பாறு அணையில் தலா, 24 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இது மக்-களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 6 நாட்களாக எந்த மாற்றமுமின்றி, வினாடிக்கு, 162 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 46.85 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் பாசனம் மற்றும் ஆற்றில் வினாடிக்கு, 162 கன அடி நீர் திறந்து விடப்படு-கிறது. ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில், 0.85 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது குறிப்பிடத்-தக்கது.
