/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் மழை நீர் புகுந்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
/
அரசு பள்ளியில் மழை நீர் புகுந்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
அரசு பள்ளியில் மழை நீர் புகுந்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
அரசு பள்ளியில் மழை நீர் புகுந்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
ADDED : டிச 04, 2024 01:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 4---
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 82 அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இதில் சாமியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், 77 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 3 கட்டடத்தில், 6 வகுப்பறைகள் உள்ளன. வழக்கம் போல், நேற்று காலை தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் பள்ளிக்கு சென்றார். அப்போது, பள்ளி வளாகம் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த பலத்த மழையால் பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது.
இதில், 6 வகுப்பறைக்குள்ளும் மழைநீர் சென்றதால், வகுப்பறைக்குள் இருந்த, 12 கம்ப்யூட்டர்கள், லேப் டாப், பீரோவுக்குள் வைத்திருந்த பதிவேடுகள், நோட்டு புத்தகங்கள், 6 சிப்பம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனைத்தும் மழை நீரில் நனைந்து சேதமானது. அதிகாரிகள் உத்தரவு படி, பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைக்குள் இருந்த மழை நீரை மோட்டார் மூலம்
அப்புறப்படுத்தினர்.