/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 26, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி, பேருஹள்ளி வழியாக, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி செல்லும் சாலை உள்ளது. இதன் வழியாக தினமும், 500க்கும் மேற்பட்ட டூவீலர்கள், 200க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
அவ்வப்போது பெய்து வரும் மழையால், விவசாய நிலங்களில் புகுந்து வரும் மழைநீர், பேரூஹள்ளி பகுதியில் தேங்கி சாலையை கடந்து செல்கிறது. இதனால் அன்றாட பணிகளுக்கு செல்வோர், சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

