/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராஜாஜி நினைவு இல்லம் மறு சீரமைப்பு பணி
/
ராஜாஜி நினைவு இல்லம் மறு சீரமைப்பு பணி
ADDED : அக் 30, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி நினைவு இல்லம் உள்ளது. கிருஷ்ணகிரியில் கடந்த மாதம், 14ம் தேதி நடந்த அரசு விழாவில், ராஜாஜி நினைவு இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, 44.50 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கி, பணிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம், பழைய மூங்கில்கள், ஓடுகள் மாற்றப்பட்டு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இவற்றை நேற்று, பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டார்.

