/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் கடை கட்டுமான பணி துவக்கம்
/
ரேஷன் கடை கட்டுமான பணி துவக்கம்
ADDED : பிப் 05, 2024 10:55 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி பஞ்., மேலேரிக்கொட்டாய் கிராமத்திலுள்ள பகுதிநேர ரேஷன் கடையில், நாசன் கொட்டாய், பள்ளிகொடத்தான் கொட்டாய், பாப்பனேரி கொட்டாய் மற்றும் தண்ணீர் பள்ளம் ஆகிய பகுதிகளில் இருந்து, 240 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு, ஒரு ரேஷன்கார்டுதாரர், 10 ரூபாய் வீதம், 240 கார்டுதாரர்களும் சேர்ந்து, 2,400 ரூபாயை வசூலித்து, மாத வாடகையாக கடந்த, 5 ஆண்டுகளாக கட்டி வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டித்தர மனு அளித்திருந்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் செலவில், மேலேரிக் கொட்டாய் கிராமத்தில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்கான பணியை, எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். பொதுமக்கள், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

