தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மூல பொருட்களின் விலை உயர்வு ‍கொலு பொம்மைகள் 30 சதவீதம் விலை ஏற்றம்

மூல பொருட்களின் விலை உயர்வு ‍கொலு பொம்மைகள் 30 சதவீதம் விலை ஏற்றம்

மூல பொருட்களின் விலை உயர்வு ‍கொலு பொம்மைகள் 30 சதவீதம் விலை ஏற்றம்


ADDED : அக் 07, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், கொலு பொம்மைகளின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

வரும், 11ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. இதையொட்டி வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து ஒன்பது நாளும் பூஜை செய்வது வழக்கம். இதற்காக கடந்த ஐந்து மாதங்களாக, கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில், கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. அரை அடி முதல், 3 அடி வரை, 40க்கும் மேற்பட்ட கொலு பொம்மை செட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். இதில், லலிதாம்பிகை, 18 ரிஷி, ஜலகிரீவர் பாடசாலை, சுந்தரேஷ்வரர் ஊர்வலம், திருதுராஷ்டிரர் சபை, கிருஷ்ணன், யமுனை, ஆர்த்தி செட், வாஸ்து பெருமாள் லட்சுமி, கோவில் கும்பாபிஷேகம் என, இந்த ஆண்டு புதிதாக கொலு பொம்மை செட்கள் விற்பனை செய்யப்பட்டுகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில் கொலு பொம்மை விற்பனை செய்யும், கந்தன் - வசந்தி தம்பதி கூறியதாவது:

தமிழகத்தில், காஞ்சிபுரம், கடலுாருக்கு அடுத்து கிருஷ்ணகிரியில் தான் அதிகளவில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து வரும் பொதுமக்கள், 80 சதவீதமும், உள்ளூரில், 20 சதவீதமும் விற்பனை ஆகிறது. 40 பொம்மைகள் வரை உள்ள ஒரு செட், 500 முதல், 21 ஆயிரம் ரூபாய் வரையும், தனி பொம்மைகள், 200 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது. 50 சதவீதம் களிமண்ணாலும், 50 சதவீதம் காகிதத்தாலும் பொம்மைகள் செய்யப்படுகிறது.

தற்போது களி மண் எடுக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால், 60 சதவீதம் மட்டுமே இங்கு களிமண் பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது. 40 சதவீத பொம்மைகள் மதுரை, பாண்டிச்சேரி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வரப்படுகிறது. மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பாலும், போக்குவரத்து மற்றும் கூலி உயர்ந்துள்ளதாலும் இந்த ஆண்டு, 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us