/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 23, 2024 09:45 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் முத்தப்பா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், நீண்ட காலமாக ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்களாக குறைந்த மாத ஊதியத்தில் பணியாற்றி வரும், 60 வயது நிரம்பாத அனைவருக்கும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி உடனே வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகளவில் நோயாளிகள் வருவதால், அதற்கேற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்கி அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு, ஒரே மாதிரியான உயர்ந்தபட்ச தினக்கூலியை வங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வார ஓய்வு, அரசு விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செயலாளர் அனிதா, மாவட்டத்தலைவர் லோகநாயகி, மாவட்ட பொருளாளர் சாந்தி, மாநிலத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் நன்றி கூறினார்.