/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரூர் பெரிய ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
/
பாரூர் பெரிய ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
பாரூர் பெரிய ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
பாரூர் பெரிய ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
ADDED : டிச 15, 2024 01:07 AM
பாரூர் பெரிய ஏரியிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
போச்சம்பள்ளி, டிச. 15-
போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில், இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த, 12 காலை, 9:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் தண்ணீர் திறந்து விட்டனர். இதன் மூலம், 2,397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி பகுதி விவசாயிகள் பயன் பெறுவதற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 12ம் தேதி இரவே கிழக்கு பிரதான இரட்டை மதகை அடைத்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர் என்ற செய்தி, நமது நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, மீண்டும் வழக்கம்போல் நீர்வளத்துறை அதிகாரிகள், பாரூர் பெரிய ஏரி கிழக்கு பிரதான இரட்டை மதகு கால்வாயில், தண்ணீர் திறந்து விட்டனர். இதையடுத்து கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.