ADDED : மார் 24, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சிவா, 34. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் மீது, ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனில், கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறிப்பு மற்றும் சூதாட்டம் என மொத்தம், 3 வழக்குகள் உள்ளன.
நேற்று முன் தினம், ஓசூர் அலசநத்தம் பிரிவு சாலையில் நின்று கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தார். சிவாவை ஹட்கோ போலீசார் கைது செய்தனர்.
