/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நல்லுறவு கிரிக்கெட் போட்டி; போலீசார் அணி வெற்றி
/
நல்லுறவு கிரிக்கெட் போட்டி; போலீசார் அணி வெற்றி
ADDED : பிப் 10, 2025 01:31 AM
ஓசூர்: ஓசூர் உட்கோட்ட போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நட்புறவை வளர்க்கும் வகையில், மத்திகிரி கூட்ரோடு அருகே உள்ள தனியார் கிரிக்கெட் கிளப் மைதானத்தில், நல்லுறவு கிரிக்கெட் போட்டி நேற்று காலை நடந்தது. முதலில் ஆடிய போலீசார் அணி நிர்ணயிக்கப்பட்ட, 12 ஓவரில், 166 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய பத்திரிகையாளர் அணி, 106 ரன்கள் மட்டுமே எடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெற்ற பெற்ற போலீஸ் அணிக்கு, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் பரிசுக்கோப்பையை வழங்கினார். அதேபோல், இரண்டாமிடம் பெற்ற பத்திரிகையாளர்கள் அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும், போட்டியில், 40 ரன்னுக்கு மேல் எடுத்த ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் சிறந்த ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

