/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
ADDED : பிப் 13, 2024 12:00 PM
கிருஷ்ணகிரி: போலீஸ் துறைக்கு உதவியாக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணிகளுக்கு, ஊர்காவல் படையினர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 31 ஊர்க்காவல் படை பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், ஊர்க்காவல் படையினருக்கான ஆட்கள் தேர்வு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், 272 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம், எடை உள்ளிட்ட உடல்தகுதிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தேர்வில் கலந்து கொண்டவர்களில், 222 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு நாளை (14ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 100 மீ., ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட, 31 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என, போலீசார் கூறினர்.
நேற்று நடந்த ஊர்காவல் படையினருக்கான தேர்வில், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில் ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஆயதப்படை டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, செல்வமணி மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.