ADDED : டிச 18, 2024 01:42 AM
கிருஷ்ணகிரி, டிச. 18-
ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில், கடந்த வாரம் பெஞ்சல் புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்
களுக்கு, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை சார்பில், நிவாரண உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. இதில், அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை, டீ துாள், பிஸ்கட் உள்பட, 10 பொருட்கள் அடங்கிய பைகளை, 100 குடும்பங்களுக்கு, 50,000 ரூபாய் மதிப்பில் வழங்கினர்.
நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன்பு, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், மத்திய ரிசர்வ் காவல்படை குழு நிறுவனர், அட்மின் எஸ்.ஐ., ரங்கநாதன், எஸ்.ஐ., வீரபத்திரன், அன்பழகன், சென்னப்பன் மற்றும் குழு முக்கிய நிர்வாகிகளான துணைத்
தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் மதிவாணன், சிவக்குமார், கோவிந்தராஜ், செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
* இதைதொடர்ந்து, அரசம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், இருளர் காலனி பகுதியை சேர்ந்த, 28 பேருக்கும், களர்பதி கிராமத்தில், 33 பேருக்கும், ஊத்தங்கரை, நாராயணா நகரை சேர்ந்த, 39 பேருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், பஞ்., தலைவர்கள் ஜெயந்தி புகழேந்தி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.