/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரம் பிரிக்காமல் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய கோரிக்கை
/
தரம் பிரிக்காமல் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய கோரிக்கை
தரம் பிரிக்காமல் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய கோரிக்கை
தரம் பிரிக்காமல் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய கோரிக்கை
ADDED : ஜன 06, 2024 07:17 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது, கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், தரம் பிரிக்காமல் செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்தாண்டு அரசு உத்தரவின்படி, பொங்கல் தொகுப்பிற்கு அந்தந்த மாவட்டத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. கரும்பு ஒன்று, 24 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதுடன், அறுவடை கூலி, வாகன வாடகையை விவசாயிகளே கொடுத்தனர். இதனால் கரும்பு ஒன்றுக்கு, 18 ரூபாய் கிடைத்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
ஆனால் தனியார் வியாபாரிகள் கரும்பை தரம் பிரிக்காமல், ஒரு ஜோடி கரும்பை, 60 முதல், 70 ரூபாய் வரை கொள்முதல் செய்ததுடன், அறுவடை கூலி, வாடகையை அவர்களே கொடுத்தனர். நடப்பாண்டு, கரும்பு சாகுபடி குறைந்துள்ளதுடன், உழவு செய்தல், நடவு, தொழிலாளர்கள் கூலி, உரம், பராமரிப்பு செலவு ஆகியவை அதிகரித்துள்ளது. எனவே, இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், கரும்பை தரம் பிரிக்காமல் அரசு முழுமையாக கொள்முதல் செய்வதுடன், கரும்பு ஒன்றுக்கு, 35 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.