/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை
/
பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணிகள் நிழற்கூடம்
சீரமைக்க கோரிக்கை
ஊத்தங்கரை, நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, காட்டேரி பஞ்.,க்கு உட்பட்ட கருக்கம்பட்டி கிராமத்தில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும்
புனரமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது, பயணிகள் நிழற்கூடம் முட்புதர்களால் சூழ்ந்து, பொதுமக்களுக்கு
பயனில்லாமல் உள்ளது. எனவே பயணிகள் நிழற் கூடத்தை சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.