/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டு மனை பட்டா குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
/
இலவச வீட்டு மனை பட்டா குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
இலவச வீட்டு மனை பட்டா குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
இலவச வீட்டு மனை பட்டா குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 03:02 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க, திருநங்கைகள் கோரிக்கை விடுத்-தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையினர் சார்பில், திருநங்கை, திரு-நம்பி மற்றும் இடைப்பாலின நபர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
இதில், நலவாரிய அட்டை, அரசிதழில் பெயர் திருத்தம், ஆதார் பெயர் திருத்தம், வாக்காளர் அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை, ரேஷன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, புதிதாக பதிவு செய்தவர்களுக்கு நல-வாரிய அட்டை வழங்கப்பட்டது. அப்போது திருநங்கைகள் சார்பில், இலவச வீட்டு மனைபட்டா, இலவச வீடு, கால்நடை வளர்ப்புக்கான கடனுதவி, தொழில் தொடங்குவதற்கான கடனு-தவி, தொழில் பயிற்சிகள், வேலை வாய்ப்பு மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி, மாவட்ட திட்ட அலுவலர் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

