/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சந்திர சூடேஸ்வரர் கோவிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க கோரிக்கை
/
சந்திர சூடேஸ்வரர் கோவிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க கோரிக்கை
சந்திர சூடேஸ்வரர் கோவிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க கோரிக்கை
சந்திர சூடேஸ்வரர் கோவிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 12:55 AM
ஓசூர் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., முன்னாள் தலைவர் நாகராஜ் தலைமையிலான, பா.ஜ.,வினர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ஓசூர், சப் - கலெக்டர் அலுவலகம் முன் இயங்கி வந்த பஸ் ஸ்டாப், தற்போது தனியார் மருத்துவமனை கிளை விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாப் இல்லாமல், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை இல்லை. ஓசூர் மாநகரின் முக்கிய கடைவீதியான எம்.ஜி., சாலை மற்றும் நேதாஜி சாலையில் அதிகளவு மக்கள் கூடுகின்றனர். போக்குவரத்து நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, இங்கு நடைபாதை மற்றும் கழிவறை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் மலை மீதுள்ள சிறுவர் பூங்கா, பல ஆண்டுகளாக பராமரிப்பற்று உள்ளது. அதை சீர் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க, நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளதை, செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.