/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எண்ணேகொள்புதுார் திட்டத்தை 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
/
எண்ணேகொள்புதுார் திட்டத்தை 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
எண்ணேகொள்புதுார் திட்டத்தை 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
எண்ணேகொள்புதுார் திட்டத்தை 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : செப் 16, 2025 01:56 AM
கிருஷ்ணகிரி ;எண்ணேகொள்புதுார் கால்வாய் திட்டத்தை அடுத்த ஆண்டிற்குள் முடிக்க அரசுக்கு கோரிக்கை வைதூது, விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் ராகிமானப்பள்ளி கிராமத்தில், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், துணைத்தலைவர் முருகன், பொருளாளர் சதாசிவன் ஆகியோர் பேசினர். மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி ஒன்றியம் ராகிமானப்பள்ளியில், பாரதியார் ஆண்கள் சுயஉதவிக்குழுவில், 1.80 லட்சம் ரூபாய் சேமிப்பு தொகை உள்ளது. எனவே, வங்கிக்கடன் வழங்க, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளரை கேட்டுக்கொள்வது.
எண்ணேகொள்புதுார் திட்டத்தை, 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இதற்காக கையகப்படுத்திய நிலங்களின், 2020ன் விலையை மறுபரிசீலனை செய்து, 2025ம் ஆண்டின் சந்தை விலையை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
மார்க்கண்டேயன் நதியிலுள்ள முட்புதற்களை அகற்றி, உபரி நீர் செல்லும் வகையில் பராமரிக்க வேண்டும். போலுப்பள்ளி அரசு மருத்துவமனை கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவு நீரை, ராகிமானப்பள்ளி ஏரியில் திறந்து விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீரை சுத்திகரித்து விட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.